தன்னை தானே வெட்டிக்கொண்ட நபர்!

தன்னை தானே வெட்டிக்கொண்ட நபர்!

பலாங்கொடை பின்னவள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்த சிலரில் ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தன்னை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக உறவினர்கள் சிலருடன் பலாங்கொடை பின்னவள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றில் தனது கழுத்து மற்றும் கை பகுதியை வெட்டிக் கொண்டதால் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்த போது உறவினர்களுடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூறியஆயுதம் ஒன்றில் தன்னை தானே வெட்டிக் கொண்டார்.

பலாங்கொடை பின்னவள றைவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய (ராமேஷ்வரன் ஜெகன்)என்பவரே பாரிய காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவள காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

manel