டில்லி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவ பின்னணி: மருத்துவர்கள் மூவர் கைது

டில்லி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவ பின்னணி: மருத்துவர்கள் மூவர் கைது

டில்லி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவ பின்னணியில் செயற்பட்டார்கள் என்ற சந்தேககத்தில் மருத்துவர்கள் மூவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்களுள் இருவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் லக்னோவைச் சேர்ந்தவர்.

புதுடில்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகே நேற்று முன்தினம் (10) நடந்த தற்கொலைத் தாக்குதலை மருத்துவர் ஒருவரே மேற்கொண்டிருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் மருத்துவர்கள் மூவர் தற்கொலைதாரியுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் அவர்கள் கைதுசெய்யப்ப்ட்டுள்ளனர்.

எஸ். ரஜீவன்