சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000 ஐத் தாண்டியது!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000 ஐத் தாண்டியது!

இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதிக்குள் 950,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 951,742 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அவர்களுள் பெரும்பாலானோர் இந்திய நாட்டவர்கள் என்பதுடன், அந்த எண்ணிக்கை 221,953 ஆகும்.

மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, மே மாதம் முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 75,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை தெரியவருகிறது.

manel