கொழும்பு கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம்

கொழும்பு கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம்

கொழும்பு ஹுனுப்பிட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காராம விகாரையில் 19ஆவது வருடமாக நடைபெறும் “புத்த ரஷ்மி”
தேசிய வெசாக் வளையத்தின் மூன்றாவது நாள் நிகழ்வுகள் நேற்று [01.05.2026] வெகு விமர்சையாக இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் மூன்றாம் நாளுக்கான நகர வெசக் வெளிச்சக்கூடுகள் மற்றும் அலங்கார தோரணைகளை , தன்சல் (அன்னதானம்) நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

வெசாக தினத்தை முன்னிட்டு கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த தேசிய வெசாக் வளையக் கண்காட்சி பௌத்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது. மூன்றாவது நாள் நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

manel