கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிவடைந்து வருவதுடன், பல முக்கிய கச்சா எண்ணெய் வகைகள் 100 அமெரிக்க டொலருக்கும் குறைவான விலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தைத் தரவுகளின்படி, ‘பிரெண்ட்’ வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 97.33 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. 

மேலும், ‘டபிள்யூ.டி.ஐ’  வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 97.33 அமெரிக்க டொலராகவும், ‘மர்பன்’  கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 95.05 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

manel