எரிபொருள் QR-ஐ அகற்றுவது குறித்து தொடர்ந்து ஆராய்வு
எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
‘அத தெரண’ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வேகத்திற்கு இணையாக விலை குறையவில்லை என்று கூறினார்.
இதேவேளை, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மேலும் எந்தவித தடைகளும் இல்லை எனவும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

