ஆளுமைகளை கௌரவித்த IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்ஸ்டிடியூட்

ஆளுமைகளை கௌரவித்த IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்ஸ்டிடியூட்

IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்ஸ்டிடியூட் இன் ஆளுமைகளை கௌரவிக்கும் விழா கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.

ஜனவரி 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு – 11 கடற்கரை வீதியில் அமைந்துள்ள புதிய கல்யாண் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வு IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்,

ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளரும் சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோவின் முன்னிலையில் இடம்பெற்ற ஆளுமைகளை கௌரவிக்கும் விழாவில், கலைஞர்களான பாசில் மற்றும் கவிக்கமல் ஆகியோரின் வழிகாட்டலில் இசைநிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆளுமைகள் கௌரவிப்பில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்ட கலைஞர்கள், சமூக சேவகர்கள், ஊடகவியலாளர்கள், ஊடக உரிமையாளர்கள் ,விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

manel