ஆபத்தின் விளிம்பில் லோனாக் பிரதான சாலை!

ஆபத்தின் விளிம்பில் லோனாக் பிரதான சாலை!

ஆபத்தின் விளிம்பில் லோனாக் பிரதான சாலை அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட சபைக்கு உரித்தா ன லோனாக் மீனாட்சி கிளர்மென்ட் ஆகிய மூன்று தோட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையை கடந்த பத்து வருடங்களாக குன்றும் குழியுமாக போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இல்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

சுமார் 500 குடும்பங்கள் வாழும் இந்த பிரதேசமானது வட்டவளை நகருக்கு செல்லும் பிரதான சாலையின் 7 கிலோமீட்டர் தூரத்தை இங்கு வாழும் மக்கள் நாளாந்த கடமைகளை நிறைவேற்ற இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர்.

இப் பிரிவிலிருந்து ஹட்டன் போஸ்கோ ஹை லென்ஸ் செனான் குயில் வத்தை வட்ட வலையில் உள்ள பாடசாலைகளுக்கு நாளாந்தம் 40க்கும் மேற்பட்டோர் தரம் ஒன்று முதல் கா பொ தா உயர்தரம் வரை கல்வி பயிலும் மாணவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் இச்சாலை சேரும் சகதியுமாக காணப்படுவதால் மாணவர்கள் சொல்லனா துயரத்தை எதிர் நோக்குகின்றனர்.

இந்நிலையில் இச்சாலை சீர்கேடு காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் இடையே குழந்தை பிரசவித்த சம்பவங்களும்,நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னர் மரணித்த சோகமான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இச்சாலை ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதி பங்களிப்புடன் 2015 ஆம் ஆண்டு வட்டவளை நகரத்திலிருந்து அகரவத்தை velioya பிரதான சாலையின் 9.5 கிலோமீட்டர் செப்பனிடப்பட்டது.

இதில் அகரவத்தையிலிருந்து லோனாச் செல்லும் பிரதான சாலையின் 4 கிலோமீட்டர் சாலை இதுவரை புனரமைக்கபடாமைக்கான காரணம் என்ன என பொதுமக்கள் தங்களது கடும் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இச்சாலையில் மூன்று பிரதான பாலங்கள் அண்மைக்காலமாக பெய்த கடும் மழையினால் எவ்வித வடிகால் கட்டமைப்பு இன்மையால் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாலை தொடர்பாக பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தேர்தல் காலங்களில் மாத்திரம் வருகை தரும் மலையக அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை அளித்து தேர்தல் முடிந்தவுடன் இவர்களின் வாக்குறுதி காற்றோடு பறந்து விடுவதாகவும் கடந்த பத்து வருட காலமாக இச்சாலை தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் தொலைக்காட்சி மூலமாகவும் தெரியப்படுத்தியும் மலையக தலைமைகள் மௌனம் காப்பது பெரும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார், எனவே புதிதாக ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலாவது இச்சாலைக்கு விடிவுகாலம் பிறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.

manel