வசூலில் இமாலய சாதனை படைத்து உலகை மிரட்டும் ‘ஜெயிலர் 2’!
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் வேட்டை நடத்தி வருகிறது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் பல ஊர்களில் திரையிடப்படும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் திரைப்படம் வெளியான வெறும் 6 நாட்களில் உலகளாவிய ரீதியில் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் இந்திய மதிப்பல் ரூ. 541 கோடி கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரூ. 337 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 204 கோடியும் பெற்று பொக்ஸ் ஓபீஸில் தூள் கிளப்பி வருகிறது.
திரைப்படம் வெளியான குறுகிய நாட்களுக்குள் இவ்வளவு வசூலைக் குவித்துள்ளமை திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

