மெக்ஸிகோவில் ஆசிரியர்கள் போராட்டம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய பொலிஸார்
2026 உலகக் கோப்பை “ரசிகர் திருவிழா” நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மெக்ஸிகோ நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க சோகாலோ சதுக்கத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ஆசிரியர்கள் மீது கலவரத் தடுப்புப் பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
கடந்த ஒரு வாரத்தில் ஆசிரியர்களுடன் பொலிஸார் மோதலில் ஈடுபடுவது இது இரண்டாவது முறையாகும்.
மேலும், ஜூன் 11 ஆம் திகதி உலகக் கிண்ண உதைப்ந்தாட்ட தொடக்க ஆட்டத்தை நடத்த மெக்ஸிகோ நகரம் தயாராகி வருவதால், மேலும் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சம்பள உயர்வு ,ஓய்வூதியச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வரும் CNTE தொழிற்சங்கத்துடன் தொடர்புடைய ஆசிரியர்கள், மே மாத நடுப்பகுதியில் ஆசிரியர் தினப் பேரணியின் போது , உலகக் கிண்ணப் போட்டிக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.
தொடக்கப் போட்டிக்கு முன்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், “எந்த முன்னேற்றமும் ஏற்படாது” என்று மெக்ஸிகோ நகரத்தில் உள்ள CNTE பிரிவு 9-இன் பொதுச் செயலாளர் பெட்ரோ ஹெர்னாண்டஸ் மொரேல்ஸ் எச்சரித்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது .

