மலைப்பகுதி ரயில் சேவைகள் பாதிப்பு

மலைப்பகுதி ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் தடம் புரண்டதால் மலைப்பகுதி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதாகவும், அதை மீள் தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்