போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்த இருவர் கைது!

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்த இருவர் கைது!

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை மற்றும் போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (11) வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர சந்திப் பகுதியில் வைத்து, போலி சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 12 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 8 போலி தேசிய அடையாள அட்டைகளை உடைமையில் வைத்திருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அங்கொடை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

manel