சுனில் செனவிரத்ன சிறைச்சாலையில் உயிரிழப்பு!
நிதி மோசடிச் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன (78) திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்றிரவு (11) சிறைச்சாலை வளாகத்திற்குள் அவர் உயிரிழந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

