தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு
2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் இந்த வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளது.
மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 70% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக நாமக்கல்லி 76.43% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 61.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 68.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தேர்தலில் சினிமா பிரபலங்கள் மற்றும் அதிகளவான மக்கள் வாக்களித்து தேர்தலாக இது பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

