குளவி கொட்டுக்கு இலக்கான பெண்கள் வட்டவளை வைத்திய சாலையில்

இன்று மதியம் குளவி கொட்டுக்கு இலக்கான பெண்கள் வட்டவளை வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை.

இச் சம்பவம் இன்று 21 ம் திகதி மதியம் ஹட்டன் வெளிஓயா மேற்பிரிவில் இடம் பெற்று குளவி கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹட்டன் வெளிஓயா மேற்பிரிவு தேயிலைத் தோட்டத்தில் இன்று 21 ம் திகதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவி கூடு களைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வட்டவளை பிராதேசிய வைத்திய சாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மஸ்கெலியா நிருபர்.

manel