கிணற்றில் விழுந்து சிறுவன் பலி!
பொல்பிதிகம, பதிரென்னகம பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
கிணற்றில் விழுந்த சிறுவன் சிகிச்சைக்காக பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுவன் வெல்பிட்டிய, மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதானவர் என தெரியவந்துள்ளது.
தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் சிறுவன் விழுந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பொல்பிதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

