காலி வைத்தியசாலை வளாகத்தில் திடீரென பற்றி எரிந்த மின்மாற்றி!
காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ பரவல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

