‘ஏஹிபஸ்ஸிகோ’ சமாதான நடைபயணத்தின் 5ஆம் நாள் இன்று

‘ஏஹிபஸ்ஸிகோ’ சமாதான நடைபயணத்தின் 5ஆம் நாள் இன்று

‘ஏஹிபஸ்ஸிகோ’ சமாதான நடைபயணத்தின் ஐந்தாவது நாள் இன்று (26) தோலங்கமுவ தேசிய பாடசாலைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமானது. இன்றைய தினம் இந்த நடைபயணம் யக்கல அபேசேகரராமய வரை சென்றடையவுள்ளது.

நாளை (27) யக்கல அபேசேகரராமயவிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை நடைபயணம் தொடரவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபயணம் களனி விகாரையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கி நகரவுள்ளது.

அன்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள ‘ஏஹிபஸ்ஸிகோ’ சமாதான நடைபயணத்தின் அரச விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான தேரர்களின் பங்கேற்புடன், கடந்த 21ஆம் திகதி தம்புள்ளை ரஜமஹா விகாரையிலிருந்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

manel