ஊழலைக் காட்டி கொடுத்தால் பரிசு!

ஊழலைக் காட்டி கொடுத்தால் பரிசு!

அமெரிக்காவில் மோசடிகளை வெளிப்படுத்த உதவும் தகவல்களை வழங்குவோருக்கு, கண்டறியப்படும் மொத்த மோசடித் தொகையில் ஒரு சதவீதத்தை மத்திய அரசாங்கம் வெகுமதியாக வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான மோசடிகள் தொடர்பில் தகவல்களை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில், 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் அறிவிப்பின்படி, மோசடி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், fraud.gov இணையத்தளத்தில் தகவல்களைச் சமர்ப்பித்து, அதன் மூலம் வழக்குத் தொடரப்படுவதற்கோ அல்லது குற்றவாளி ஒருவர் தண்டிக்கப்படுவதற்கோ வழிவகுப்பவர்கள் அதிகபட்சமாக 30,000 அமெரிக்க டொலர்கள் வரை வெகுமதி பெறத் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்தை அமெரிக்க நீதித்துறை நிர்வகிக்கும்.

ஒரே மோசடி தொடர்பில் பலர் தகவல்களை வழங்கியதாகக் கூறி வெகுமதியைக் கோரும் சந்தர்ப்பங்களில், யாருக்கு அந்தப் பணம் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானே தனிப்பட்ட முறையில் தீர்மானிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

manel