ஈரானிய அணியின் பயிற்சி முகாம் மெக்ஸிகோவுக்கு மாற்றம்
அமெரிகாவில் நடைபெற திட்டமிடப்பட்ட ஈரானிய அணியில் உலகக் கிண்ண பயிற்சி முகாம் பீபாவின் அனுமதியுடன் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஈரானிய உதைப்ந்தாட்ட நிர்வாக அமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை பீபா உறுதிப்படுத்தவில்லை.
அரிசோனாவின் டக்சனில் ஈரான் பயிற்சி பெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் போர் , பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த இடமாற்றம் ஒரு சாத்தியமாக இருந்தது. டக்சனின் கினோ விளையாட்டு வளாகத்தின் அதிகாரிகள் இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மெக்சிகோ வழியாக ஈரானிய அணி அமெரிக்காவிற்குள் நுழையும் என்பதால், முகாமை மாற்றுவது சாத்தியமான விஸா சிக்கல்களைத் தீர்க்கும் என்று ஈரான் நாட்டின் உதைப்ந்தாட்ட கூட்டமைப்பு கூறியது. “ஈரான் ஏர் விமானங்களைப் பயன்படுத்தி, அந்த அணி மெக்சிகோவிற்குச் சென்று வரக் கூட வாய்ப்புள்ளது” என்று தலைவர் கூறினார்.

