ஹோர்முஸ் முற்றுகையை நீக்குமாறு அமெரிக்காவுக்கு வேண்டுகோள்

ஹோர்முஸ் முற்றுகையை நீக்குமாறு அமெரிக்காவுக்கு வேண்டுகோள்

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான (MoU) ஆரம்பகட்ட, அதிகாரப்பூர்வமற்ற கட்டமைப்பு வரைவு ஒன்றை ஈரான் கொண்டுள்ளது.

இது, அமெரிக்க இராணுவம் வெளியேறுவதையும் கடற்படை முற்றுகையை நீக்குவதையும் கோருகிறது என ஈரானின் அரசு நடத்தும் IRIB தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி, பல ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்குப் பதிலாக, ஒரு மாதத்திற்குள் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக வணிகக் கப்பல் போக்குவரத்தை போருக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கவும், ஓமானுடன் இணைந்து நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்தை நிர்வகிக்கவும் ஈரான் உறுதியளித்துள்ளது என்று அந்த அறிக்கைகள் தெரிவித்தன. இந்த ஒப்பந்தத்தில் இராணுவக் கப்பல்கள் சேர்க்கப்படவில்லை.

40 நாட்கள் நீடித்த சண்டைக்குப் பிறகு, ஈரான், அமெரிக்கா , இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏப்ரல் 8 ஆம் திகதி போர் நிறுத்தத்தை எட்டின. இந்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஈரான் , அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் ஏப்ரல் 11 , 12 ஆகிய திக‌திகளில் இஸ்லாமாபாத்தில் ஒரு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தின, ஆனால் அதில் எந்தவொரு உடன்பாட
எட்டப்படவில்லை.

கடந்த சில வாரங்களாக, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகளை கோடிட்டுக் காட்டும் பல முன்மொழியப்பட்ட திட்டங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

manel