ஹோமாகம இளைஞரின் மரணம்: கைதான குற்றப்புலனாய்வு அதிகாரி தும்பர சிறைக்கு திடீர் மாற்றம்!

ஹோமாகம இளைஞரின் மரணம்: கைதான குற்றப்புலனாய்வு அதிகாரி தும்பர சிறைக்கு திடீர் மாற்றம்!

ஹோமாகம காவல்துறை காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம காவல் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த உப காவல்துறை பரிசோதகர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகநபராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அன்றைய இரவே அவர் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிகாரி முன்னர் கடமையாற்றிய காலப்பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரைக் கைது செய்துள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பலர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், குறித்த உப காவல்துறை பரிசோதகருக்கு சிறைச்சாலைக்குள் உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அவர் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

manel