2027 ஜனவரி வரை நீர் கட்டணங்களில் மாற்றம் இல்லை!
2027 ஜனவரி மாதம் வரை நீர் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமவிலுள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நீர் கட்டண திருத்தங்கள் ஆண்டுக்கு இருமுறை மதிப்பாய்வு செய்யப்படுவதாக விளக்கிய அவர், அடுத்த மதிப்பாய்வு 2027 ஜனவரியிலேயே திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்படும் எந்தவொரு கட்டண மாற்றமும் நீர் சுத்திகரிப்புச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்றும், அது ஜனவரி மதிப்பாய்வின் போது மதிப்பிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

