வட கடலில் கைதான இந்திய மீனவர்கள் 31பேருக்கு விளக்க மறியல்

வட கடலில் கைதான இந்திய மீனவர்கள் 31பேருக்கு விளக்க மறியல்

வட கடலில் கைதான இந்திய மீனவர்கள் 31பேருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இன்று (04) இந்திய மீனவர்கள் நால்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இந்த நால்வர் மீது சந்தேகம் நிலவியதால் நேற்று அவர்கள் ஆஜர்படுத்தப்படவில்லை.

மேலதிக விசாரணை செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

தமிழக மீனவர்கள் 74 பேர் தற்போதுவரை யாழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கதிரவன்

எஸ். ரஜீவன்