ரூ.130 மில்லியன் செலவில் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு 15 நவீன வாகனங்கள்!

ரூ.130 மில்லியன் செலவில் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு 15 நவீன வாகனங்கள்!

உலக வங்கியின் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ரூ.130 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 11 நவீன ரீச் ட்ரக் வாகனங்களும் 4 ஃபோர்க்லிஃப்ட் வாகனங்களும் நேற்று (23) மருத்துவ விநியோகப் பிரிவிடம் (MSD) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளில் நீண்டகாலமாக நிலவிய அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே தடவையில் 15 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவப் பொருட்களைக் கையாளும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கைகளின் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துவதுடன், மருந்துப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கையாளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மருந்துக் களஞ்சியங்களின் சேமிப்புத் திறனை விரிவுபடுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டில் காலி, கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் மூன்று புதிய மருந்துக் களஞ்சியத் தொகுதிகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடளாவிய மருந்து விநியோக வலையமைப்பையும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தையும் மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ விநியோகம்) வைத்தியர் எஸ்.பி.ஏ.எல். ரணவீர மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தேதுணு டயஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

manel