மூடியிருந்த கடவையில் ஓடிய ஓட்டோ சாரதி ரயிலில் மோதிப் பலி!

மூடியிருந்த கடவையில் ஓடிய ஓட்டோ சாரதி ரயிலில் மோதிப் பலி!

ரயில்வே கடவை மூடியிருந்தும் எச்சரிககை மணி ஒலித்துக்கொண்டிருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதி ரயில் மோதி ஸ்தலத்திலேயே பலியானார்.

இறாகமை வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெண்கள் இருவர் படுகாயமடைந்து இறாகமை கொழும்பு வடக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே கடவை மூடியிருந்தபோது அதைக் கடப்பதற்கு அவர் முயற்சித்தபோது வந்த ரயில் முச்சக்கர வண்டியை மோதி இழுத்துச் சென்றுள்ளது.

எஸ். ரஜீவன்

Related Posts