போதைப்பொருள் குற்றச்சாட்டு: ஜேவிபி நகர சபை உறுப்பினர் ராஜினாமா
தன் கணவனும் மகனும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதையடுத்து பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திருமதி திஸ்னா நிரஞ்சலா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் கணவரும் மகனும் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முழு கவனம் செலுத்தி வரும் இவ்வாறானதொரு தருணத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காகவும் என்.பி.பி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை கம்பஹா மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

