பேருந்து சில்லில் சிக்குண்டு இளைஞன் சம்பவ இடத்தில் பலி!

பேருந்து சில்லில் சிக்குண்டு இளைஞன் சம்பவ இடத்தில் பலி!

பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்த தனியார் பேருந்து ஒன்றின் சில் ஒன்றில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 09.30.மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்த தனியார் பேருந்தினை இயக்க செய்து விட்டு பேருந்தில் இருந்து சாரதி இறங்கியுள்ளதாகவும் தயார் நிலையில் இருந்த பேருந்தில் உள்ள தடையாளி இயங்காததன் காரணமாக பேருந்துக்கு முன்பால் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது பேருந்தின் சில் ஏறி சம்பவ இடத்திலேயே இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 27வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் எனவும் இந்த நோர்வூட் சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தை பிறப்பிடமாகவும் திருமணம் முடித்து வவுனியா செட்டிகுளம்  பகுதியில் வசித்து வருவதாகபொலிஸார் மேலும் தெரிவித்ததோடு உயிர்ழந்த இளைஞன் அவரோடு இனைந்த குழுவின் குழாய் நீர் அகழும் வேலைத்திட்டத்திற்காக வவுனியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

manel