நைஜீரியாவில் 300 பயங்கரவாதிகள் கொலை கடத்தப்பட்ட 221 பேர் மீட்பு

நைஜீரியாவில் 300 பயங்கரவாதிகள் கொலை கடத்தப்பட்ட 221 பேர் மீட்பு

நைஜீரியப் படைகள், மே மாதம் நாடு தழுவிய அளவில் நடத்திய தொடர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், சந்தேகப்படும்படியான 317பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும், 314 பேரைக் கைது செய்ததாகவும் இராணுவம் செவ்வாயன்று தெரிவித்தது.

மாதாந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய இராணுவ செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ஒனோஜா, இந்த நடவடிக்கைகளின் விளைவாக கடத்தப்பட்ட 221 பேர் மீட்கப்பட்டதாகவும், சந்தேகப்படும்படியான 18 பயங்கரவாதிகள் சரணடைந்ததாகவும் கூறினார்.

வான், தரை, கடல் படைகள் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. பயங்கரவாதிகளிடமிருந்து 93 ஆயுதங்கள் மீட்கப் பட்டன.

மூன்று சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அழிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான லிற்ற‌ர் திருடப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் ஒனோஜா கூறினார்.

manel