நுவரெலியா உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
நுவரெலியா உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் நுவரெலியாவில் நடைபெற்றது.
இதன்போது, நுவரெலியா உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், உபசெயலாளர்கள், உபபொருளாளர், உபதலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், சங்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள 27 உதைபந்தாட்டக் கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துகொண்டமை இக்கூட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.
இதன்போது, சங்கத்தின் கணக்கறிக்கை, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சங்கத்தின் தற்போதைய அபிவிருத்தி நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, எதிர்காலத்தில் நுவரெலியா உதைபந்தாட்ட சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள், அவற்றுக்கான ஆதரவு மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் உதைபந்தாட்ட விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கும், வீரர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

