தீபாவளியை முன்னிட்டு வட்டவளை வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை!

தீபாவளியை முன்னிட்டு வட்டவளை வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை!

தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கினிகத்தேனை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (30) வட்டவளை நகரில் விசேட திடீர் சோதனையொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, வட்டவளை நகரிலுள்ள உணவகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்தச் சோதனையின்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவு மற்றும் பானப் பொருட்களின் தொகையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமல், கவனக்குறைவாகவும் சுகாதாரமற்ற சூழல்களிலும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.

பொதுச் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

manel