திருகோணமலையில் காணி அபகரிப்பு மற்றும் நில மீட்பு குறித்தான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் காணி அபகரிப்புகள் மற்றும் நீண்டகாலமாக மக்கள் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (22) திருகோணமலையில் நடைபெற்றது
திருகோணமலை சர்வோதய கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் மிக முக்கியத்துவமிக்கதாக இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மொரவெவ, முத்துநகர் கிண்ணியா, குச்சவெளி மற்றும் புல்மோட்டை போன்ற பிரதேசங்களை மையப்படுத்தி
அப்பகுதிகளின் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுத்து வரும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு, காணி விடுவிப்புக்கான அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.

