திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்த முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (16) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு சேவைகள் பிரதி அமைச்சருமான திரு. அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான திரு. ஜயந்தலால் ரத்னசேகரா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இக்கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயர் அரசாங்க அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு: மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இழுபறிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அதிகாரிகளுக்கு
பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்கி, திட்டங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பொதுத்துறை அதிகாரிகளுக்கு தலைவர்களினால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன
மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளின் தலையீட்டுடன் விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

