சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கான செலவு தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

