கஜ்ஜா கொலை வழக்கில் கைதான அச்சினி விளக்கமறியலில்

கஜ்ஜா கொலை வழக்கில் கைதான அச்சினி விளக்கமறியலில்

கஜ்ஜா  என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அச்சினி  என்ற அனுஷா லக்மாலி என்ற என்ற பெண் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து, நேற்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.

அருண விதானகமகே என்பவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

manel