சம்மாந்துறையில் கெப் – படீ வாகனங்கள் மோதி கோர விபத்து!

சம்மாந்துறையில் கெப் – படீ வாகனங்கள் மோதி கோர விபத்து!

சம்மாந்துறை கிளிவெட்டி சந்திப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கெப் ரக வாகனமும், படீ (Buddy) ரக வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிவேகமாக வந்த இரு வாகனங்களும் கிளிவெட்டி சந்திப்பில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் பயங்கரமான முறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மோதலின் வீரியத்தினால் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

தற்போதைய நிலை விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார், விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விபரங்கள் குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

manel