கெப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;ஒருவர் பலி!

கெப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;ஒருவர் பலி!

திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
தம்பலாகாமம் பகுதியில் நேற்று கெப் (Cab) ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோதலின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடுமையான காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தம்பலாகாமம் பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் தம்பலாகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

manel