இரக்கக் கண்டி மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம்:

இரக்கக் கண்டி மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம்:

ஆற்றுவாய் மணல் அடைப்பு மற்றும் படகு உபகரணங்கள் திருட்டினால் பெரும் நெருக்கடிதிருகோணமலை மாவட்டத்தின் இரக்கக் கண்டி பாலத்திற்குக் கீழ் படகுகளை நிறுத்திவிட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் உள்ளூர் மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் இரு பெரும் பிரதான பிரச்சினைகளால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆற்றுவாய் (ஆத்துவாய்) பகுதியில் அளவுக்கு அதிகமான மணல் மேடிட்டு அடைபட்டுள்ளதன் காரணமாக, மீனவர்கள் தங்களது படகுகளைத் தடையின்றிச் செலுத்தி கடலுக்குச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. வழமையான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் படகுகள் கரை ஓரங்களிலேயே முடங்கிக் கிடப்பதால், மீனவக் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மீனவர்களுக்கு மேலும் பேரிடியாக படகு உபகரணங்கள் திருடப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. கடலுக்குச் சென்று வந்து கரை ஓரத்தில் படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளுக்குச் செல்லும் வேளையில், படகுகளின் இயந்திர மோட்டார்கள் மற்றும் மீன்பிடி வலைகள் என்பன மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றனகடன் பட்டே இத்தகைய அதிக விலையுள்ள மோட்டார்கள் மற்றும் வலைகளை வாங்கித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், பொருட்கள் திருடப்படுவதால் பெரும் பொருளாதார இழப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

உபகரணங்களை இழந்து தொழிலுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலைமை இங்குள்ள பல மீனவக் குடும்பங்களில் உருவாகியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தலையிட்டு, பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அப்பகுதி மீனவர்கள் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்:

ஆற்றுவாய் மணல் அகற்றம்: ஆற்றுவாயில் ஏற்பட்டுள்ள மணல் அடைப்பை உடனடியாக அகற்றி, படகுகள் தடையின்றி கடலுக்குச் சென்று வரக்கூடிய வகையில் பாதையைச் சீரமைத்துத் தர வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கை: படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்,

தொடர் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அதிகாரிகள் உடனடியாக விரைந்து செயல்பட வேண்டும் என்பதே இரக்கக் கண்டி பகுதி மக்களின் அவசியமான எதிர்பார்ப்பாகும்.

manel

Related Posts