பொலிஸ் மக்களை தாக்க முடியாது; ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு.

பொலிஸ் மக்களை தாக்க முடியாது; ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு.
மனோ IGPயிடம் எடுத்துரைப்பு. “இனி நடக்காது”, IGP உறுதி>”பொலிஸ் கடமையை செய்யலாம். ஆனால், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது. அநீதியை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு.
அதைபொலிஸ் தடுக்குமானால், நானே, மனோ கணேசன், நேரடியாக களத்துக்கு வருவேன்…” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் தெரிவித்துள்ளார்.
செட்டியார் தெருவில் பொது மக்கள்-பொலிஸ் மத்தியில் ஏற்பட்டுள்ள முறுகுநிலை தொடர்பில், இன்று IGP, கொழும்பு மத்திய SSP மகேஸ் குமாரசிங்க ஆகியோரை தொடர்பு கொண்ட மனோ கணசன் எம்பி, மேலும் கூறியதாவது; செட்டியார் தெரு விவகாரத்தில் எவரையும் கைது செய்ய முடியாது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பட்டவர்கள் விடுவிக்க படுகிறார்கள். பொலிஸ் இனி எவரையும் தாக்க முடியாது.
புறக்கோட்டை, மாளிகாவத்தை பொலிஸ், இவ்விவகாரத்தில் தலையிட கூடாது. நாளை இது தொடர்பில், மத்திய கொழும்பு SSP மகேஸ் குமாரசிங்க விசாரிப்பார். நாளை 28 காலை SSP அலுவலகத்தில் விசாரணை நடக்கும்.
மேற்கண்ட இந்த உறுதிபாடுகளை IGP பிரியந்த வீரசூரிய எனக்குஉறுதி அளித்தார். இதையடுத்து, கொழும்பு மத்தி SSP மகேஸ் குமாரசிங்க, புறக்கோட்டை பொலிஸ் OIC க்கு இவை பற்றி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். “…பொலிஸ் கடமையை செய்யலாம். ஆனால், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது.
அநீதியை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. அத் பொலிஸ் தடுக்குமானால், நானே, மனோ கணேசன், நேரடியாக களத்துக்கு வருவேன்…”<இதை IGPக்கு நான் நேரடியாக தெரிவித்தேன்> நான் தற்சமயம் கொட்டகலை மரண சடங்கில் இருப்பதால், தொலைபேசி மூலமாக IGP, SPP, ஆகியோருடன் நேரடியாக உரையாடினேன்.

