அநுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ஆலோசனைக் குழு

அநுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ஆலோசனைக் குழு

அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, ஒருங்கிணைந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், முகாமை செய்தல், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பான தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயல்முறைக்காக ஜனாதிபதி ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பதில் அட்டமஸ்தானாபதி, ருவன்வெலி சைத்தியாராமாதிகாரி, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர், மஹாவிஹார சங்க சபையின் பொதுச் செயலாளர், வடமத்திய திசையின் தலைமைச் சங்கநாயக, சங்கைக்குரிய ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் இந்தக் குழுவின் இணைத் தலைவர்களாகச் செயல்படுகின்றனர்.

அபயகிரிய சைத்தியாராமாதிகாரி, இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் வெளிவாரி பட்டப்படிப்புகள் விரிவாக்கப் பிரிவின் பணிப்பாளர் சங்கைக்குரிய பேராசிரியர் கல்லஞ்சியே ரதனசிறி, தூபாராம சைத்தியாராமாதிகாரி சங்கைக்குரிய சாஸ்திரபதி கஹல்லே ஞானிந்த, இந்திய மகாபோதி சங்கத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர், போமலுவ விஹாரவாசி சங்கைக்குரிய கலாநிதி கஹடகொல்லேவே மேதாங்கர ஆகிய தேரர்கள் உட்பட தொடர்புடைய நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகங்கள், அரச அதிகாரிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட 32 பேர் கொண்ட உறுப்பினர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புனித பூமியின் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, ஒருங்கிணைந்த தீர்மானம் எடுக்கும் பொறிமுறையினூடாக தொல்பொருள், வரலாற்று, சமய மற்றும் கலாச்சார பாரம்பரியங்களைப் பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

manel