அதிரடியாக பயிற்றுவிப்பாளர்களை மாற்றும் சென்னை

அதிரடியாக பயிற்றுவிப்பாளர்களை மாற்றும் சென்னை

20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதனிடையே, அணிகளும் பல்வேறு மாற்றங்களை அமுல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.

அதன்படி, தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீவன் பிளமிங் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், சென்னை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஷகீர் கான் நியமனம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த மைக்கேல் ஹசி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் மற்றும் அணியின் பிற பயிற்சியாளர்களான டொமி சிம்சக், கிரேக் கிங், ராஜீவ் குமார் ஆகியோரும் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

manel