கம்பாவின் பல பகுதிகளில் இன்று 10மணிநேர நீர் விநியோக தடை

கம்பாவின் பல பகுதிகளில் இன்று 10மணிநேர நீர் விநியோக தடை

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று (11) 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ நகர சபை பகுதிகளுக்கும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேச சபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளன. 

அத்துடன், கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது. 

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சூரிய மின்சக்தி அமைப்பின் மேம்படுத்தல் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

manel

Related Posts