வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத்தமிழர் மாநாட்டில் நானுஓயா திருச்செல்வம்

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத்தமிழர் மாநாட்டில் நானுஓயா திருச்செல்வம்

பங்கேற்ப்பு.உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியட்னாம் நாட்டில் மிகவும் சிறப்பான முறையில் இரண்டாவது முறையாக உலகத் தமிழர் மாநாடு நேற்றும் (21) இன்றும் (22) கொண்டாடி வருகின்றன , இதில் இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் நானுஓயா பிரதான நகரில் இயங்கும் ரேஹா ஸ்டீல் ஹாட்வெயார் நிலையத்தின் உரிமையாளரும் , பிரபல தொழில் அதிபரும் , சமூக சேவையாளருமான திருச்செல்வம் பங்கேற்றுள்ளார்.

உலக தமிழர் சமூகத்தின் பெருமையையும் , ஒற்றுமையையும் முழு உலகிற்கும் எடுத்துரைக்கும் மிகவும் பிரம்மாண்ட முறையில் தமிழர் மாநாடு மற்றும் உலக தமிழர் வர்த்தக மாநாடு என்ற வகையில் இரண்டாவது முறையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

குறித்த நிகழ்ச்சியில் உலகில் 60 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் வரலாற்றுச் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர் அந்த வகையில் இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் திருச்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது அனைவராலும் பெருமை கொண்டு பாராற்றி வருகின்றனர்.

குறித்த மாநாட்டில் பங்கு கொள்ளும் திருச்செல்வம் எந்த அரசியல் சிந்தனையையும் உள்வாங்காமல் மலையக சமூகத்தின் தனித்துவத்தையும் இலக்காகக் கொண்டு சிறந்த சொற்பொழிவு ஒன்றினையும் நிகழ்த்த உள்ளார்.

manel