மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

அரலகங்வில பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த விவசாயி அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

குறித்த விவசாயி வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விவசாயின் சடலம் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மமேற்கொண்டு வருகின்றனர்.

manel