வாகன இறக்குமதியை வரையறுக்கவில்லை

வாகன இறக்குமதியை வரையறுக்கவில்லை

வாகன இறக்குமதியைக் வரையறுப்பதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், முதல் காலாண்டில் பதிவானதை போன்று இரண்டாவது காலாண்டிலும் அதே வீதத்தில் வளர்ச்சியடையும், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில்  பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

manel