விமானப்படை பயிற்சி விமானம் விபத்து!

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 போர் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஜெட் விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும், விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாராசூட்டில் பத்திரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel