மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக நுவரெலியா பதுளை  பிரதான  வீதியின் பாரிய மரம் ஒன்று  முறிந்து விழுந்ததினால் குறித்த வீதியின்  போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளதாக  நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (26) திங்கள் கிழமை இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய கடும் மழையின்  காரணமாக இந்த அனர்த்தம்  ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மார்க்கேஸ் தோட்ட கெமுனுபுற கெகிரிவாவி கரையோரத்தில் இருந்த பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்கள் பாதிக்கப்படிருந்தது, இதேவேளை நுவரெலியா பொலிஸார் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் பொதுமக்கள்  ஆகியோர் இணைந்து மரத்தை  வெட்டி அகற்றும் நடவடிக்கையில்  ஈடுபட்டனர்,

அதன் பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதோடு குறித்த பகுதியில் மரம் அடியோடு சரிந்து மரம் மின்கம்பங்களின் மீது விழுந்தமையினால் குறித்த பகுதிக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதண்டி தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்ந்தமையினால்  குறித்த  வீடு  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தம் சேதமடைந்துள்ளது.

manel