இன்றும் நாளையும் ஐந்து ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

இன்றும் நாளையும் ஐந்து ரயில் சேவைகள்  இடைநிறுத்தம்

களனிவெளி ரயில் கடவையின் புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று (22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த 5 ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுகேகொட – உடஹமுல்லவுக்கு இடையில் உள்ள பங்கிரிவத்த ரயில் கடவையில் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனால் இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக , ரயில்வே இணை முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

manel