அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தகவலின்படி, இலங்கைக்கு 1,341,953 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

வருகை தந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியர்கள், இவர்களின் எண்ணிக்கை 274,919 ஆகும்.

இவர்களைத் தவிர, பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் மட்டும், முதல் 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் அதிகபட்ச தினசரி வருகை ஜூலை 26 ஆம் திகதி பதிவாகியுள்ளது, அன்று 7,579 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.

manel