TIN அடையாள இலக்க சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயம்
2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நிதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் (TIN) அடையாள இலக்க சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
நாட்டின் வரி அடித்தளத்தை விரிவுபடுத்துவதுடன், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

